சேனக் கெழங்கு :


கருணைக் கிழங்கைக் கொங்கு வட்டாரத்தில் சேனக் கெழங்கு என்று

வழங்குவர். பலருக்குப் பொரியலாவதால் இந்தப் பெயர் ஏற்பட்டதெனலாம்.

                             --------- . கொழந்தசாமி, புதுச்சேரி

                                      

நெலக்கடலெ : மணிலாவிலிருந்து வந்த மணிலாக் கடலை, வேர்க்கடலை/நிலக்கடலை/மல்லாட்டெ என்னும் பெயர்களிலும் அறியப்படுகின்றது. கொங்கு வட்டாரத்தில் நிலக்கடலை ஒலித் திரிபாக, நெலக்கடலெ என்று கூறப்படுகின்றது.


      ---------- . கொழந்தசாமி, புதுச்சேரி

 

வைக்கப் போர் / தட்டுப் போர்



 நீளமான வைக்கோல்/ சோளத் தட்டுக் குவியலைக் கொங்கு வட்டாரத்தில் போர் என்று சுட்டுகின்றனர். இச் சொல் பட்டினப்பாலையின் 137ஆம் அடியிலும், 435ஆம் திருக்குறளில் வைத்தூறு என்றும் பயின்றுள்ளது. இந்தத் திருக்குறளின் உரையில் பரிதியார், காலிங்கர், மு.வரதராசனார் போன்றோர் குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும் என்று பொருளுரைத்துள்ளமை இவண் கருதத்தக்கது.  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி வினையாகவும் பெயராகவும் இந்தச் சொல் பயில்வதை ( ஆறாம் படலம்மூன்றாம் பாகம், . 267) உணர்த்தும்போது,

செறிந்து பொருந்துகை, கதிர் வைக்கோற் படப்பு,

 விண்மீன், குவியல், சண்டை, புகர் நிறம், புள்ளி

ஆகிய பொருள்களில், சூழலுக்கேற்ப , போர் என்கின்ற பெயர்ச் சொல் கருத்தைக் கொண்டிருப்பதைப் பதிந்துள்ளது. இத்தகைய சொற்கள் தமிழின் செம்மொழிப் பண்பைத் தெளிவுறுத்துவதோடு மொழி வரலாற்றுக்கும் சொற்பொருண்மையியலுக்கும் சிறப்பான ஆய்வுத் தரவுகளாகின்றன.

                                   …….. கொழந்தசாமி, புதுச்சேரி

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு