வள்ளுவ ‘அமை’
முனைவர் ப. குழந்தைசாமி,
புதுச்சேரி.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர் ( 906)
என்னும் குறட்பாவில் எதுகை/ மோனையில் அமை என்னும் சொல் மூங்கில் என்னும் பொருளில், தலைவியின் மூங்கில் போன்ற
[ அமை= மூங்கில்; ஆர்
= போன்ற] தோள் அமைப்பைக் குறிப்பதாக, ஆளப்பட்டுள்ளதை உரைகளால் அறியலாம். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (முதல் மடலம்;
முதற்பாகம், ப. 288 ) அமைக்கு மூங்கில் என்றும் பொருள் சுட்டுகின்றது. “அமையாரும் வெற்ப “ ( பழமொழி, 232 அடி03 ) முதலிய இலக்கியப் பதிவுகளில் மூங்கில் என்னும்
பொருளில் அமை பயின்றுள்ளதை ஒப்பலாம். இதற்கு இணையாக
வேயுறு தோளி என்னும் பயில்வும் இவண் உன்னத்தக்கது. அமை என்னும் சொல் வினைப் பொருளில்,
அமைந்த (குறள் 118 ) என்றவாறு
திருக்குறளில் இயல்வதும் சுட்டத்தக்கது.
இவ்வாறு பெயராகவும் வினையாகவும் பல்பொருட்சொல்லாக அமை இயல்வதைத் தெளிந்தால் கருத்து விளங்கி, பனுவலின் பயன் சிறக்கும்.
பயன்பட்டவை
தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத் தரவுகள்.
Comments
Post a Comment