வள்ளுவம் விண்டுரைக்கின்றஅரிது’ : சொற்பொருண்மை நோக்கு

முனைவர் ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

மானுட மேன்மையை நோக்காகக் கொண்ட வள்ளுவம் வாழ்க்கையின் இயல்பை எடுத்துக்கூறி, இந்த எண்ணம்/ செயல் தக்கது; வளர்ச்சிக்கானது; இனபம் பயப்பதோடு புகழை மிகுவிப்பது என்று ஊக்குவிக்கவும், இது தகாதது; துன்பத்தோடு பழியை ஏற்படுத்தவல்லது என எச்சரிக்கவும் செய்யும். இந்த வாய்பாட்டில் அரிது என்னும் சொல்லும் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதுஅருமை என்னும் பண்படியாகத் தோன்றிய, அருமையானது ; கடினமானது; இயலாதது என்னும் பொருளுடைய அரிது என்னும் சொல், அரிதாக இருக்கும் என்ற பொருளுடைய குறிப்பு வினையாகவும்; அருமையானது என்னும் பொருளுடைய குறிப்பு  வினையாலணையும்பெயராகவும்; அரிதாக என்னும் பொருளுடைய குறிப்பு முற்றெச்சமாகவும் திருக்குறளில் இயல்வதை எடுத்துரைப்பதாக, சொல்லின் சூழல் பொருளை, இலக்கணக் குறிப்புடன் அறிந்தால் விழுமியம் தெளிவாகும் என்கின்ற கருதுகோளில் இக் கட்டுரை அமைகின்றது.  வள்ளுவத்தில்,  

07, 08, 16, 29, 101, 177, 213, 227, 235, 248, 377, 419, 443, 499, 503, 606, 647, 693, 745, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1180 ஆகிய குறட்பாக்களில் அருமையானது / இயலாது என்னும் பொருளிலும், 1160ஆம் குறட்பாவில் அருமையானது என்றும், 1276ஆம் குறளில் அரிதான என்னும் பொருளிலும்   ’அரிதுபயில்கின்றது. இதைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.

குறளெண்

சொல்லாட்சி

கருத்து

சொல் வகை

07

மனக்கவலை மாற்றல்

அரிது

இறை நினைவு இல்லாவிட்டால் மனக் கவலை  தீர்க்க இயலாது

குறிப்பு வினை

08

பிறவாழி நீந்தல் அரிது

இறை நினைவு இல்லாவிட்டால் பிறவித் துன்பத்தைத் தொலைக்க இயலாது

குறிப்பு வினை

16

பசும்புல் தலைகாண்பு அரிது

புல் முளைக்காது

குறிப்பு வினை

29

வெகுளி கணமேயும் காத்தல் அரிது.

 சினத்தை ந்ண்ட்டிக்க இயலாது

குறிப்பு வினை

101

ஆற்றல் அரிது

ஈடு ஆகமுடியாது

குறிப்பு வினை

177

மாண்டற் கரிதாம் பயன்

நல்லதாக அமையாது

குறிப்பு வினை

213

பெறலரிதே

பெற முடியாது

குறிப்பு வினை

227

பிணி தீண்டல் அரிது

நோய் தீண்டாது

குறிப்பு வினை

235

வித்தகர்க்கு அல்லால் அரிது

மற்றவர்க்கு இல்லை

குறிப்பு வினை

248

ஆதல் அரிது

ஆக இயலாது

குறிப்பு வினை

377

துய்த்தல் அரிது

நுகர இயலாது

குறிப்பு வினை

419

வாயினராதல் அரிது

இருக்க இயலாது

குறிப்பு வினை

443

அரிதே

இயலாதது

குறிப்பு வினை

499

ஒட்டல் அரிது

எளிதானது அன்று

குறிப்பு வினை

503

இன்மை அரிதே 

இல்லாதிருப்பது அருமை

குறிப்பு வினை

606

பயன் எய்தல் அரிது

 பயனை அடைய முடியாது.

குறிப்பு வினை

647

வெல்லல் யார்க்கும் அரிது

எவராலும் வெல்ல முடியாது

குறிப்பு வினை

693

தேற்றுதல் யார்க்கும் அரிது

தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

குறிப்பு வினை

745

கொளற்கரியதாய்

கைப்பற்ற முடியாததாக

குறிப்பு வினை

762

தொல்படைக் கல்லால் அரிது

வேறுபடைக்கு இருக்க முடியாது

குறிப்பு வினை

823

மாணார்க் கரிது

மாட்சியடையாதவர்க்கு இல்லை.

குறிப்பு வினை

843

செய்தல் அரிது

செய்யமுடியாது

குறிப்பு வினை

886

ஒன்றல் அரிது

ஒருபோதும் முடியாது

குறிப்பு வினை

1049

கண்பாடு அரிது

தூங்க இயலாது

குறிப்பு வினை

1153

அரிதரோ தேற்றம்

தெளிய இயலாது

குறிப்பு வினை

1155

அரிதால் புணர்வு

கூடுதல் எளிதல்ல

குறிப்பு வினை

1156

அரிதவர்
நல்குவர் என்னும் நசை

அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது

குறிப்பு வினை

1160

அரிதாற்றி 

அரியவற்றைச் செய்து

குறிப்பு வினையாலணையும்பெயர்

1180

ஊரார்க்கு அரிதன்றால்

ஊரார்க்குக் கடினமன்று

குறிப்பு வினை

1276

அரிதாற்றி

அரிதாகிய பிரிவை

முற்றெச்சம்

 

அரிது என்னும் சொல்லால் விண்டுரைக்கலாகின்ற அடிப்படை விழுமியங்கள்:

Ø  இறை நினைவு நன்மையாக்கும்.

Ø  உலக வளமைக்கு மழை தேவை

Ø  சினம் நீடிக்கக்கூடாது

Ø   உதவியைப் பெரிதாகப் போற்றுக

Ø  பிறிரின் பொருளை விரும்பக்கூடாது

Ø  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக

Ø  புகழ் வாழ்வு வாழ்க

Ø  இரக்கம் கொள்

Ø  ஆன்றோர் அறவுரை போற்று

Ø  பெரியோரைப் போற்றி நட்பாகக் கொள்

Ø  கற்றோர்க்கும் அறியாமை இருக்கும்

Ø  சோம்பல் முன்னேற்றத்தைக் குறைக்கும்

Ø  திறனாளனை வெல்ல இயலாது

Ø  தலைவன் தன்னை ஐயுறாவண்ணம் நடக்கவும்

Ø  அரண் வலிமையும் வளமும் உடையதாக இருக்கவேண்டும்

Ø  தோல்வியால் துவலக்கூடாது

Ø  படிப்பு பண்பாட்டை வளர்க்கவேண்டும்

Ø  அறிவற்றோர் தமக்குத் தாமே தீங்குசெய்வர்

Ø  உட்பகை தீது

Ø  இல்லாமை கொடுமையானது

Ø  கணவர் பிரிவு துன்பமானது

Ø  உடல்மொழியின்/ மெய்ப்பாட்டின் கருத்தறிக

 

            இவ்வாறாக, அரிது என்னும் வினைச்சொல்லால் வள்ளுவம் வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைத்துள்ளது. இவ்வாறே, திருக்குறளில் இயல்கின்ற அறவியல் சொற்களை நோக்கினால் மனவளம் பெருகும்; மானுடம் வெல்லும்.

பயன்பட்டவை

தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, முதன் மடலம்- முதற்பாகம், தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்.

                                                      ********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு