திருக்குறள் சுட்டும் துலை: சொற்பொருண்மை

.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

திருக்குறளின் மொழியமைப்பும் சொல்லாட்சியும் சீரியன; சிறப்பின. அதனால் வள்ளுவத்தில் பயில்கின்ற ஒவ்வோர் உருபனையும் கூர்ந்துநோக்கிக் கருத்தறிந்து, பனுவலின் விழுமியத்தைத் தெளியலாம். காட்டாக, துலை என்னும் அரிய சொல்லைக் கருதலாம்.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலை
யல்லார் கண்ணும் கொளல் ( 986 )

என்னும் குறட்பாவில், துலை என்னும் அரிதான பண்புப்பெயர்  இயல்கின்றது. இதற்கு இணை /ஒப்பு என்று பொருள். தனக்கு எந் நிலையிலும் இணையாகாத ஒருவரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்க என்னும் அறம் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றது.

துலை =  துலாம் இராசி, கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் தங்குமிடம், தராசு, நூறு பலம் கொண்ட நிறை ஆகிய பொருளுடையது. இவற்றுள் ஒப்பு என்னும் பொருளில் துலை வள்ளுவரால் ஆளப்பட்டுள்ளது.

                               பயன்பட்டவை                  

வலைத்தமிழ் மின் அகராதி https://www.valaitamil.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88--tamil-dictionary98425.html

இணையதளத் தரவுகள்

                                                                *********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு