முந்நாள், முன்னால், முன்னாள் – ஒப்பொலிப் பொருண்மை

               ப.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

தமிழில் வேறுபட்ட பொருள்கொண்ட சொற்கள் , ஒப்புமையுடைய ஒலியமைப்புடையனவாக [முந்நாள், முன்னால், முன்னாள்] அமைவதுண்டு. இத்தகைய மயங்கொலிச் சொற்களைச் தொடர்ச்சூழல் நோக்கிப் பொருண்மைக் கூறுகளைப் பிரித்தறிந்து பொருள் தெளியலாம். சான்றாக, முந்நாள், முன்னால், முன்னாள் என்னும் சொற்களைக் கருதலாம். இவற்றை முறையே ,

 மூன்று + நாள் [ முக்காலம், முத்தமிழ் போன்று ]

முன் + இடம் [ இங்கு முன் என்பது ஏழாம் வேற்றுமை இடப் பொருளது]

முந்தைய + காலம் [இங்கு முன் என்பது கடந்த என்னும் பொருளது]

என்று பொருண்மைக் கூறுகளின் அடிப்படையில் பகுத்துத் தெளியலாம்.

                                                         ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு