வள்ளுவத்தில் ‘காலை’: சூழல் பொருண்மை
ப.கொழந்தசாமி,
அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
உயர்தனிச்
செம்மொழியான தமிழின் சொற்பொருண்மைக் களம் விரிவான ஆய்வுத் தளமாக உள்ளது. தொல்பழங்காலச் சொற்கள்
தொடர்ந்து இன்றுவரை பயில்கின்றன. இந் நிலையில் ‘காலை’ என்னும் பல்பொருட்சொல் திருக்குறளில் இயல்வதை விளக்குவதாக
இக் கட்டுரை அமைகின்றது.
காலை
- சொற்பொருள்:
தனிச் பெயர்ச்சொல்லாக, காலை என்னும் சொல் பின்விடியல் நேரத்தையும் , இடைச்சொல்லாக
பொழுது[குறிப்பிட்ட நேரம்] என்னும்
கருத்தையும் குறிக்க, உடலுறுப்பான கால் என்னும் பெயர்ச்சொல்லோடு,ஐ என்னும் இரண்டாம் வேற்றுமையுருபை ஒட்டுகின்றபோது
காலை நீட்டு என்னும் கூட்டுச்சொல் அமைகின்றது.
எனவே ஒரு தொடரில் காலை என்னும் சொல் பயின்றால், சூழல் நோக்கிக் கருத்துணரவேண்டும்.
வள்ளுவத்தில்:
பழந்தமிழ் மரபுகளையும் புதுமையையும்
ஏற்றுப்போற்றுகின்ற வள்ளுவத்தில் ,
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை (1225)
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் (1227)
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின் (937)
ஆகிய குறட்பாக்களில் நாளின் தொடக்க நேரமான பின்விடியல் காலத்தைச் சுட்டுவதாகவும்,
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை
அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும் (799)
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் ( 1094 )
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன் (1226)
ஆகிய குறட்பாக்களில் அகலாதபோது, கெடும்போது, நோக்குகின்றபோது என்று குறிப்பிட்ட
நேரத்தை / காலத்தைக் குறிக்கின்றது. இவ்வாறு காலை என்னும் சொல்லின் பல்பொருள் தனமையை / வழக்கை
அறிந்து, தொடர்ப் பொருண்மைச் சூழல் நோக்கிக் கருத்துணரலாம்.
பயன்பட்டவை
இணையத் தரவுகள்
Comments
Post a Comment