மைகோதி - கொங்கு வழக்கில்

. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

உயர்தனிச் செம்மொழியான/ ஒட்டுமொழிப் பண்பினதான தமிழ், சொல் வளமும் பொருண்மைக் கட்டமைப்பும் கொண்ட சிறப்பினதாகும். கால வளர்ச்சியாலும் பன்முகத் தன்மையினாலும் பொதுத் தமிழோடு, வட்டார வழக்குகளும் இயல்கின்றன. இவை பொருண்மையியல் / சமூக மொழியியல் ஆய்வுகளுக்கு வாய்ப்பாகின்றன. அந் நிலையில், மைகோதி என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல் கொங்கு வழக்கில் இயலுமாற்றை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது.

மைகோதி:

            உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளை நிறைவேற்ற மனிதன் பல கருவிகளைக் கையாள்கின்றான்; கருவிகள் மானுட வளர்ச்சிக்கும் வாய்ப்பாகின்றனமகளிர் தலைகுளித்து முடி உலர்த்த  மைகோதியை முடிச் சிக்கை நீக்கப் பயன்படுத்துகின்றனர். மை + கோதி > மைகோதி. கருமையான நீண்ட முடியைக் குறிப்பதாக மை என்னும் சொல்லும்ஒன்றரை அடி நீளமுள்ள கூர்மையான  இரும்பு / மரம் / செம்புக் கம்பி என்னும் வினையாலணையும்பெயரும்  ஒட்டி மைகோதி ஆக்கப்பட்டுள்ளது. சிக்குவாரி, சிணுக்கறுக்கி, சிடுக்குவாரி என்று பகுதிகளுக்கேற்பப் பல்வேறு பெயர்களாலும் இது வழங்கப்படுகிறது.

            தொல்காப்பியத்தில் ,

                        மைவரை உலகம் ( நூற்பா 952 ) = கரு மேகம்

                        மையறு சிறப்பின் உயர்ந்தோர் ( நூற்பா 1067) = குற்றம்

என்று கருமேகத்தையும் குற்றத்தையும் சுட்டுவதாக மை பயில்கின்றது.

               மை ஈர் ஓதி (நற்றிணை 57 அடி 10)
 
போன்ற சங்க அடிகளில் கருப்பு நிறத்தைச் சுட்டுகின்றது.

இந்தப் பொருண்மை வரலாற்றில் மை என்னும் பழந்தமிழ்ச் சொல் கொங்கு வழக்கில் கருமையான நீண்ட முடியைக் குறிப்பதாக இன்றளவும் பேசப்படுவது / இயல் மொழியாகயாகத் தமிழ் திகழ்வது மொழி வரலாற்றில் கருதத்தக்கதாகும்.

மேலும் விவரங்களுக்கு நோக்குக:

https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.JPG

                                பயன்பட்டவை

. ஜெயதேவன் (பதி.),2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

இணையத் தரவுகள்.

                                                         --------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு