தொல்காப்பியத்தில்அணி’ : சூழல் கருத்து

. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

            இந்தக் காலத்தில் தோன்றியது என்று எல்லை குறிக்கமுடியாத  உயர்தனித் தொல் செம்மொழியான தமிழின் சொற்பொருள் வரலாற்றில் கடி, அடி போன்றன பெயராகவும் வினையாகவும் பலபொருளொருசொல்லாக இயல்வதுண்டு. அந் நிலையில் தொல்காப்பியத்தில் அணி, மாறுபட்ட சொல் வகையில் பலபொருளொருசொல்லாக ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது.

அணி :

            ஈரெழுத்துப் பிரியாச் சொல்லான / ஒரு பொருண்மைக் கூறைக் கொண்ட (பகாப்பதமான) அணி என்னும் சொல் அழகு, அணிகலன், இலக்கிய அழகியல், போன்ற கருத்தில் பெயராகவும்அணிதல் என்று செயப்படுபொருள்குன்றா வினையாகவும் , அண்மை/ அருகில்    [ அண்மை யுறுப்பு] வினையடையாகவும் இயல்கின்றது. இந் நிலை இன்றும் நீடிக்கின்றது. தொல்காப்பியத்தில்,

            அணிநிலை உரைத்தல்….. (நூற்பா 1118;  அடி 05) = அழகுபெயர்

            அணி தைவரல்….(நூற்பா 1211; அடி 02 ) =அணிகலன்- பெயர்

என்னும் அடிகளில் பெயராக அணி  பயில்கின்றது. அடுத்து,

            நெய் அணி …… (நூற்பா 1096;  அடி 28) = தேய்த்தல்வினை

            இழை அணிந்து….. (நூற்பா 1101;  அடி 09)=  பூட்டுதல்- வினை

என்றவாறு வினையாக அணி  இயல்கின்றது. அடுத்து,

            இனி அணி…..(நூற்பா 237 ; 01) = அண்மையில் = வினையடை/ இடைச்சொல்

என்றவாறு வினையடையாக அணி  இயல்கின்றது.

            இத்தகைய பொருட்பனமையைக் கருதி, சொல்லின் வகை, வழங்கு சூழல் நோக்கிக் கருத்தறிந்து முறையாகப் பொருளுணரலாம்.

                                                 பயன்பட்டது

            ஜெயதேவன், . (பதி.) 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக் கழகம்.

                                              *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு