ஆடாதோடை
முனைவர் ப.
கொழந்தசாமி, தமிழ்த் துறைத் தலைவர், அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
தமிழக
மண்ணும் நீரும் வேளாண்மையும் சீரியன.
அதனால் இங்கு வளமான மரங்களும் மூலிகைகளும் செடிகொடிகளும் இயல்பாக
/ இயற்கையாக மண்டிக் கிடக்கின்றன. இவற்றை மக்களும் விலங்குகளும் பறவைகளும்
உண்பதால் நோயின்றித் திடமாக உள்ளனர். உணவே மருந்தாகின்றது.
நோய் வந்தால் இவை மருந்தாகவும் பயனாகின்றன. சித்தர்களின்
அறிவுநுட்பத்தாலும் சமூக அக்கறையினாலும் சித்த மருத்துவம் வளர்ந்தது. பக்க விளைவுகள் (அதிகம் பாதிக்காத) இல்லாதது. ஆயுள்வேதம், ஓமியோபதி,
யுனானி ஆகிய மருத்துவ முறைகளும் இத்தகையன. செடி,
கொடி, மரம், இலை,
பட்டை, வேர், பூ போன்றவற்றோடு
விலங்குகளின் உறுப்புகளும் சாணமும் மருந்தாகின்றன. இவ் வரிசையில்
ஆடாதோடை சீரிய மூலிகையாகத் திகழ்வதை விளக்குவதாக இப் பகுதி இயல்கின்றது.
ஆடாதோடை : அறிமுகம் :
இதைப்
பற்றியறிய விக்கிபீடியா மின்களஞ்சியத்தைப் படிக்க,
·
ஆடாதோடை (அல்லது ஆடாதொடை, வாசை[1] ((தாவர வகைப்பாடு: Adhatoda zeylanica) என்று
அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச்
சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப்
பயன்படுகின்றன.
இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம் எனப்படுகிறது. இந்தத் தாவரம்
முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய்
வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம். இது கைப்பு சுவை கொண்டது.
இந்த மூலிகை வெப்பத் தன்மை (சூடு) கொண்டது. கோழையகற்றி
·
நுண்புழுக்கொல்லி
·
சிறுநீர் பெருக்கி
·
வலிநீக்கி
ஆடா தொடையில்
இலைகளில் டானின், அல்கலாய்டுகள். சப்பொனின், பீனாலிக்சு, பிளாவநாய்டுகள்,[5] வாசிசின்,[6] வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ் முதலியன
காணப்படுகின்றன. "ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.”
- (அகத்தியர் குணவாகடம்)
[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88]
என்னும் பதிவும், தமிழ் இணையக் கல்விகழக இணையதளத்தில், முனைவர் ந. நாகராசன்
பதிவிட்டுள்ள,
தாவரவியல் பெயர் : Adhatoda zeylanica Medicus.
குடும்பம் : Acanthaceae
ஆங்கிலம் : Sea
holly
வளரிடம் : இந்தியாவில் எல்லாப்
பகுதிகளிலும் காணப்படும்.
வளரியல்பு : தண்டுடைய நிமிர் வளர் சிறு புதர்ச்செடி, சிறு காம்புகளையுடைய, முட்டைவடிவ, மலர்களைக் கொண்ட தொடர்ச்சியற்ற
நுணி. ஸ்பைக் வகை மஞ்சரிகளில் நீல நிற மலர்கள் உள்ளன. பூக்காம்புச்
செதில்கள்நீண்டு பரந்திருக்கும். அல்லிவட்டம் உட்புறத்தில் சிறு உரோமங்கள்
கொண்டது. கனிகள் தட்டையாகப்பட்ட முட்டை வடிவம் உடையவை, உரோமங்களற்ற காப்சூல்களாக
உள்ளன. விதைகள் தட்டையாகப் பட்டவை, நீள் உருளை வடிவம் கொண்டவை. மலர்களும் கனிகளும்
மார்ச்-ஆகஸ்டு மாதத்தில் நிறைந்து காணப்படும்.
மருத்துவப் பயன்கள் : முழுத் தாவரத்தின் சாறு
மூச்சுத் திணறல் நோயையும், பசியின்மையையும்
குணப்படுத்தும். இலையின் ஒற்றடம் கீழ்வாதம் மற்றும் நரம்பு வலியைக்
குணப்படுத்தும். வேர் கபம் வெளியேற்றும், இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு மருந்தாகப்
பயன்படும். பாலில் வேகவைத்த இலைகள் வெள்ளைப்படுதல் மற்றும் பலவீனத்தைப் போக்கும். https://www.tamilvu.org/tdb/titles_cont/archaeology/html/aduthoda.htm
என்னும்
பதிவும் கிட்டின. இன்றும் பரவலாகக் காணப்படுகின்ற இப்
புதர்ச் செடியை அறிந்து பயன்கொண்டு நல்வாழ்வை நமதாக்குவோம்.
Comments
Post a Comment