தொல்காப்பியத்தில் காலும் காழும்ஒப்பொலிப் பொருண்மை

.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

விரிவான தரவுகளின் அடிப்படையில் தமிழ் மொழியின் இயங்கியல் & இலக்கிய அமைப்பியல் ஆகியவற்றை ஆய்ந்துரைக்கின்ற தொல்காப்பியம், அகராதிப் பொருண்மையியல் எனப்படுகின்ற சொல்லியல் ஆய்வுக் களமாகத் திகழ்கின்றது. அந் நிலையில் கால் / காழ் ஆகிய ஒப்பொலிச் சொற்கள் தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ளவாற்றை விளம்புவதாக இக் கட்டுரை இயல்கின்றது. இதனால் சொற்களுக்கு முறையாகப் பொருளறிய வாய்ப்பாகும்.

ஒப்பொலிச் சொல்:

            சொற்பொருண்மையியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் ஒலியொப்புமை உடையனவாகும்போது அவை ஒப்பொலிச் சொற்கள் எனப்படுகின்றன. ஒப்பொலிச் சொற்கள் (homophone words) ஒருமித்த ஒலி உடையனவாகவும், வெவ்வேறு பொருள் கொண்டனவாகவும் இருப்பதால், பேச்சுப் பயன்பாட்டில் குழப்புகின்ற  சொற்களாகும். இவற்றை முறையாகப் பொருளறியவேண்டும். இத்தகைய சொற்கள் அனைத்து மொழிகளிலும் இயல்கின்றன.

        சான்று : மரம் / மறம் ; கலம் / களம் – two / too

இத்தகைய கால் / காழ் ஆகிய ஒப்பொலிச் சொற்களைத் தொல்காப்பியம் ஆண்டுள்ளது.

தொல்காப்பியத்தில் கால் / காழ் :

            பின் முன் கால் கடை  (நூற்பா714 / அடி01 ) = வினையெச்சம்

                                  [ இதோடு காலை(நூற்பா735 / அடி09 )  என்பதும் ஒக்கும் ]

          கண் கால் புறம்…..(நூற்பா 567 / அடி 01) = ஏழாம் வேற்றுமை இடப் பொருள்

மேற்கண்ட அடிகளில் கால் என்பது வினையெச்சமாகவும்வேற்றுமை உருபாகவும் பலபொருளொருசொல்லாக , ஆளப்பட்டுள்ளது. 1010ஆம் நூற்பாவின் 19ஆம் அடியில்கால்கோள்என்னும் மரபுத் தொடரின் பகுதியாகவும் இயல்கின்றது. காற்றைக் குறிக்கவும்[சன்னல் = காலதர் ], உடலின் உறுப்பைச் சுட்டவும்கால்இக் காலத்தில் பயன்கொள்ளப்படுகின்றது,     

365ஆம் நூற்பாவில், காழ் என்னும் பெயர்ச் சொல் ஒப்புருச் சொல்லாக  விதை என்னும் கருத்திலும், 1589ஆம் நூற்பாவில் மரத்தின் செதிலுக்குள் உள்ள ஊனை/ வயிரத்தைக் குறிப்பதாகவும் இயல்கின்றது. ‘ வயிரம் பாஞ்ச மரம்என்று இன்றும் வழங்குகின்றனர்.

                                    தொல்காப்பியம் இயற்றப்பட்டபோது தமிழில் கால் & காழ் ஆகிய பொருள் வேறுபாடுடைய ஒப்பொலிச் சொற்கள் வழங்கியதால் பதியப்பட்டுள்ளன. இத்தகைய ஒப்பொலிச் சொற்களைக் கண்டு முறையாகப் பொருளுணரவேண்டும். தொல்காப்பியரின் இலக்கணவியல் விளக்கங்களோடு, அவரது சொல்லாட்சி / நடை ஆகியனவும் ஆய்வுத் தரவாகின்றன.

                                     பயன்பட்டவை

ஜெயதேவன், . (பதி.) 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

இணையதளத் தரவுகள்.

                                         *******

           

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு