காந்தள் : தொல்காப்பியம் & சங்க இலக்கியம் – வழக்குப் பொருண்மை
ப. கொழந்தசாமி, அரசினர்
ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
தமிழ்
மொழி வரலாற்றையறியச் சொற்பொருண்மை மாற்றமும் வரலாற்று மூலமாக அமைகின்றது,
குறிப்பிட்ட ஒரு சொல் இலக்கணக் கலைச்சொல்லாகவும் பொது வழக்கிலும்
வெவ்வேறாகப் பொருள் சுட்டுவதுண்டு.
இத்தகைய நோக்கு சொற்பொருண்மை மரபை அறிய, தெளிய வாய்ப்பாகும். இந் நிலையில் காந்தள் என்னும்
பெயர்ச்சொல் இலக்கணக் கலைச்சொல்லாகவும், பொது வழக்கிலும் இயலுமாற்றை
ஒப்பிட்டுத் தெளிவுறுத்துவதாக இக் கட்டுரை இயல்கின்றது.
காந்தள்:
தமிழ்ப் பண்பாட்டை மலர்ப் பண்பாடு
என்று போற்றுமளவிற்கு,
பூக்களின் பயன்பாடு தமிழகத்தில் தொன்றுதொட்டு இயல்கின்றது. இலக்கணக் கலைச்சொற்களாகவும், மக்களின் பயன்படு பொருளாகவும்
மங்கலச் சின்னமாகவும் கருத்துவிளக்கக் குறியீடுகளாவும் மலர்கள் , பல பெயர்களில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும்
ஒரு தேசிய மலர் உண்டு. மூன்றாம் பாலினத்தோரைக் காகிதப் பூக்கள்
என்று உருவப்பதை உன்னலாம்.
தொல்காப்பியத்தில் ‘காந்தள்’:
1010ஆம் நூற்பாவில்,
வேலன் வெறியாட்டு
அயர்ந்த காந்தள்
என்று
வேலனின் வெறியாட்டைக் குறிக்கின்ற கலைச்சொல்லாக, பண்பாட்டு மரபைக் குறிப்பதாக
இது இயல்கின்றது. தமிழ் இறை மரபில் முருகனோடு தொடர்புடையதாகின்றது.
மாறாகப் பூவின் பெயராக இல்லை.
சங்க
இலக்கியத்தில் ‘காந்தள்’:
தமிழ்ப் பண்பாட்டின் தலைநாட்காலத்தே, புறப் பண்பாடுகளின்
தாக்கம் பெரிதாக இல்லாத காலத்தே தோன்றிய சங்கப் பாக்களில் 68 இடங்களில் (http://tamilconcordance.in/sangconc-1-kaa1.html) காந்தள் என்னும் ஒன்றன்பால் பெயர், மலரைக் குறிப்பதாக ஆளப்பட்டுள்ளது.
செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa
superba, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த
தாவரமாகும். இது ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இடங்களைத் தாயகமாகக்
கொண்டது; இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு
ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில்
முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல
ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து
நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும்
காட்சியளிக்கும்
(https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D)
என்னும்
மின்களஞ்சியப் பதிவு இவண் கருதத்தக்கது.
தொல்காப்பியத்தில் வெறியாட்டைக்
குறிக்கின்ற கலைச்சொல்லாக,
பண்பாட்டு மரபைக் குறிப்பதாக இயல்கின்ற காந்தள், சங்கப் பாக்களில் தாவரத்தை, அதன் மலரைச் சுட்டுதாக இயல்கின்றது.
பயன்பட்டவை
இணையத் தரவுகள்.
******
Comments
Post a Comment