தொல்காப்பியத்தில் அயர்தல் / அயர்த்தல் : நுண் பொருண்மை
ப.
கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
மக்களின்
கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுவது மொழியாகும். இதற்காக ஒவ்வொரு மொழியிலும்
எழுத்து, சொல், தொடர் என்னும் அலகுகள் உள்ளன; இவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட பொருண்மை
இயக்கம் உள்ளது. அவற்றை,
எழுத்துக்குச்
சொற்பொருளை ஆக்கும் / வேறுபடுத்தும் ஆற்றல் உண்டு
சொல்லுக்குப்
பொருள் குறிக்கின்ற / சுட்டுகின்ற வல்லமை உள்ளது.
தொடர்
ஒரு சொல்லின் பொருண்மையை வரையறுத்துக் கருத்துரைக்கும்
என்றவாறு தெளியலாம்.
இதனைத் தொல்காப்பியத்தில் பயில்கின்ற, அயர்தல்
/ அயர்த்தல் என்னும், குறைந்த ஒலி வேறுபாடுடைய இணைச் சொற்களால் உறுதிப்படுத்தலாம்.
வெறியாட்டு அயர்ந்த காந்தள்… ( நூற்பா 1010 )
என்னும் நூற்பாவில்
செய்தல் என்று உடன்பாட்டில் செயப்படுபொருள்குன்றா
வினை அடியாகத் தோன்றிய, பெயரடையாக நடத்திய என்னும் கருத்தில் அயர்தல் இயல்கின்றது.
ஆனால், 1051;17 , 1061;6 ஆகிய நூற்பாகளின் அடிகளில் ””அயர்ப்பின்” என்று ’செய்முறை அறியாமை’, ’செயலைத்
தவிர்த்தல்’ என்று எதிர்மறைப் பொருளில் பயில்கின்றது. அயர்ந்த என்னும் சொல்லின் மெல்லொலியை [ந்], அயர்த்த என்று வல்லொலியாக [த்] மாற்றுவதால் சொற்பொருள்
வேறாகின்றது.
இவ்வாறு
நுண் நிலையிலும் பொருள் மாற்றம் நிகழ்வதை அறிந்து
சொற்களைப் புரிந்துகொண்டால் புலப்பாடு சிறக்கும்.
பயன்பட்டது
ஜெயதேவன்,
வ. (பதி.) 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப்
பல்கலைக்கழகம்.
*******
Comments
Post a Comment