1083ஆம் குறட்பாவில் வியப்பு / மனநிறைவுக் கூற்று

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

திருவள்ளுரின் நவில் பொருளும் நடை நலமும் சீரியன. அதில் 1083ஆம் குறட்பாவிலுள்ள அறியேன், அறிந்தேன் என்னும் தலைவனின் முரண்பொருட் சொற்களால் ஆக்கப்பட்டுள்ள வியப்பு, நிறைவுணர்ச்சி ஆகிய உளவியல் பண்புகள் இனிய இலக்கிய அனுபவத்தை ஏற்படுத்துவதால் ஊன்றி உன்னத்தக்கன.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083 )

என்னும் களவுக் கைகோளில் இயல்கின்ற தகையணங்குறுத்தல் அதிகாரக் குறட்பா, குமரிப்பெண்ணின் காமப் பார்வையின் வீச்சைத் தலைவன் [காதலன்] எடுத்துரைப்பதாக அமைகின்றது. கேள்வி ஞானத்தால் அறிந்த செய்தியைத் தற்போது தான் கண்ணாரக் கண்டு மயங்கி அனுபவித்ததை மனநிறைவோடு தலைவன் வியந்து மகிழ்கின்றான். இது வரை தான் உணராத ஈர்ப்பால் நிறைவடைந்து, தலைவியின் பார்வை தன்னைக் கவர்ந்திருப்பதை வெளிப்படுத்துகின்றான். இது வளரிளமைப் பருவக் காமத்தின் இயல்பாகும். இதை, இலக்கணங்கள் சுட்டுகின்ற காட்சி, ஐயம் என்னும் களவுக் கால உளவியலுடன் இயைத்து நோக்கலாம், வள்ளுவத்தில் காமப் பார்வையின் வீச்சு அழுத்தமாகப் பல குறட்பாகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதை ஒப்பலாம்.

******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு