ஒழுக்குஎன்கின்ற நெறிபிறழா நன்னடத்தை: வள்ளுவ விழுமியம்

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

            திருக்குறள் மானுட மேன்மைக்கான கொள்கை வரைவாகத் திகழ்கின்றது. இதில் செய்யத்தக்கவை / தகாதவை ஆகியன உடன்பாட்டு முறையிலும் எதிர்மறையாகவும் விண்டுரைக்கப்படுகின்றன. அவற்றுள் மனித மாண்பிற்குத் தேவையான / அடிப்படையான விழுமியமாக இயல்வது ஒழுக்குஆகும்ஒழுக்கம், நெறி ஆகியன இதனோடு ஒத்த பொருளுடையன. ஒழுகு என்பதன் திரிபான, நடத்தையியல் கலைச்சொல்லான ஒழுக்குஎன்னும் பெயர்ச்சொல்லுக்கு   ’நெறிபிறழா நன்னடத்தைஎன்று பொருள் கொள்ளலாம். கொண்ட கொள்கையில் / அறநெறியில் பிறழாமல், உறுதியுடன் எப்போதும் நிற்றலை இது சுட்டுகின்றது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு (20)

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (148 )

ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு ( 161 )

ஆகிய குறட்பாக்களில் ஒழுக்குஇப் பொருளில் பயில்கின்றது. ஒருவன் அனைத்துச் சூழலிலும் நெறிபிறழா நன்னடத்தைகொண்டவனாக வாழ்தலை இது வலியுறுத்துகின்றது. இத்தகைய பண்புகள்/ உறுதிப்பாடு ஒருவனை ஐயனாக உயர்த்தவல்லன. இதுவே வள்ளுவம் சாதிக்க விழைவதாகும்.

                                                    பயன்பட்டது

                                    https://www.ytamizh.com/thirukural

                                                        *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு