வள்ளுவம் வகுத்த ’ வெண்மை ‘ – பிறழ் உணர்ச்சிப் பொருண்மை
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
அரிய அற இலக்கியமான திருக்குறள் மனிதப்
பண்புகளை மதிப்பிட்டு அறமுரைக்கின்றது. சில எண்ணங்கள் / பண்புகள் மானுட வளர்ச்சிக்கு வித்தாவன
என்று பரிந்துரைத்து ; வேறு சில ஆபத்தானவை, வாழ்க்கையைச் சீரழிப்பன என்று எச்சரிக்கின்றார்.
திருக்குறள் குறிக்கின்ற ஆண்மை, உடைமை என்பவை சீரியன/ வளர்க்கத்தக்கன ; கள்ளாமை போன்று
ஆமை என்று வள்ளுவம் அடையாளப்படுத்தப்படுபவை விலக்கத்தக்கன. இம் முறையில் ஒரு மனிதனின்
எண்ண ஓட்டத்தில் தன்னை அளவுக்கு அதிகமாக மதித்துச் செருக்கிக்கொள்வதை,
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு ( 844 )
என்று வெண்மை என்னும் கலைச்சொல்லால் வள்ளுவம்
சுட்டுகின்றது. பொது வழக்கில் வெண்மை என்பது
வெள்ளை நிறத்தைக் குறிக்கும். மனித நடத்தையியல் கலைச்சொல்லாக, தெளிவில்லாத மனநிலையை
/ தனக்கு இல்லாததை இருப்பதாக மிகைப்படுத்துவதைச்
சுட்டுகின்றது. இது ஒருவனின் வளர்ச்சி, புகழ், தன்னம்பிக்கை ஆகியவற்றைக் குலைக்கும்.
‘தன்னப் பத்தி ரொம்பத் தம்பட்டம் அடிக்கிறான்’ என்று பேச்சு வழக்கில் இத்தகையவனைப்
பழிக்கின்றனர். சமூகம் ஒவ்வொருவரையும் அடையாளம் காணும். அதை மீறிச் செருக்கினால் மக்களின்
நம்பிக்கையை இழப்பதோடு பழிப்புக்கும் ஆளாகலாம். இதை ஆங்கிலத்தில் self-conceited என்று குறிக்கலாம். Definitions of
self-conceited. adjective. characteristic of false pride; having an
exaggerated sense of self-importance. having or showing too high an opinion of oneself.
(https://www.google.com/search?q=self+conceited+meaning+in+tamil
)
என்னும் மின்னகராதி ஆங்கில விளக்கம் நோக்கத்தக்கது. எனவே வெள்ளியராக
இல்லாமல் ஒள்ளியராக இருக்க அனைவரும் முயலலாம். இது வள்ளுவம் படைக்க விழைகின்ற மானுட
மேன்மையாகும்.
*******
Comments
Post a Comment