பெரியசாமித் தூரன் நோக்கில் இளமை

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

 

உயிரனங்கள் பிறந்து வளரும்போது பல்வேறு பருவங்களைக் கடக்கின்றன. இம் முறையில் மனிதன் குழந்தை, இளமை, குமரப் பருவம், முதுமை ஆகியவற்றைக் கடக்கின்றான். இவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புப் பண்புகள் உண்டு. உள்ளது சிறக்கின்ற பண்பின் அடிப்படையில் இளமைப் பருவம் ( 15 – 25 அகவை ) சிறப்புக்குரியதாகும்.  இக் காலகட்டத்தில் உடல், உள்ளம், ஆளுமை வளர்ச்சி, திருமணம் ஆகியன இயல்கின்றன. அதனால் இலக்கியங்கள் இளமையைக் கொண்டாடுகின்றன. பள்ளி ஆசிரியரான தூரன் இளைஞர்களுக்காகப் பாக்கள் புனைந்தும், உரைநடை நூல்களை இயற்றியும் , கலைகளஞ்சியங்களைப் பதிப்பித்தும் தொண்டாற்றியதோடு, இளந்தமிழா போன்ற பாத் தொகுப்புகளையும் ஆக்கியுள்ளார். இளந்தமிழா தொகுப்பிலுள்ள ’இளமை’ ( பக்கம் 41 ) என்னும் தலைப்பிலான கவிதை, 16 அடிகளில் இயல்வதாகும். இதில்,

1.       அச்சமறியாப் பருவம்

2.       அறிவு, திறன் மேம்படுகின்ற பருவம்

3.       தோல்வியால் கலங்காத / எழுச்சியுறும் பருவம்

4.        வளர்ச்சிக்கு அடிப்படையான பருவம்

5.       வெள்ளைமனப் பருவம்

போன்ற பண்புகளைப் பெற்றதாக இளமை விளங்குவதைப் பாராட்டுகின்றார். நிறைவாக,

                வாழ்வினிலே கசப்பேறா வளரிளமைப் பருவம்

                வாழியவே! வாழியதன் மாண்பெல்லாம் வாழி!

 

என்று இளமையின் மாண்பை வாழ்த்துகின்றார். இதை விளக்கமாக, வாழ்த்தாகக் கருதிப் படிப்பதோடு, இளைஞர்களைத் தட்டியெழுப்பி அறமுரைக்கின்ற எழுச்சிப் பாவாகவும் நோக்கிப் பயன்கொண்டு இளைஞரகள் மேன்மையுறலாம். இந் நிலையிலும் பெரியசாமித் தூரன் ஆக்கத்தை ஊக்கி, மண்ணுலகத்தை விண்ணுலகாக்க வழிவகை செய்கின்றார்.

                                                   பயன்பட்டது

பெரியசாமித் தூரன்,1980, இளந் தமிழா, சென்னை; வானதி பதிப்பகம்( ஆறாம் பதிப்பு) https://www.tamilvu.org/library/nationalized/pdf/61-pe.thuran/237-elantamizha.pdf

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு