தொல்காப்பியம் சுட்டும்மாசு’ – இலக்கியப் புரிதிறன் பொருண்மை

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி.

இன்று கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களுள் முதன்மையானது; முழுமையானது தொல்காப்பியம் ஆகும். இதில் கூறப்படுட்டுள்ள இலக்கணவியல், இலக்கியவியல், திறனாய்வியல் கொள்கைகள் ஊன்றி உன்னத்தக்கன. இம் முறையில் தொல்காப்பிய மரபியலின் இறுதி நூற்பா பன்முகப் பங்களிப்புக் கொணட சிறப்பினதாகும். நூலின் 32 உத்திகளை விளக்குகின்ற இந் நூற்பாவின் இறுதிப் பகுதி,

உய்த்துக்கொண்டு உணர்த்தலோடு மெய்ப்படநாடிச்

சொல்லிய அல்ல பிற அவண் வரினும்

சொல்லிய வகையால் சுருங்க நாடி

மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு

இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்

நுனித்தகு புலவர் கூறிய நூலே               ( நூற்பா 1610; அடிகள் 22-27 )

 

என்று அறிவுறுத்துகின்றது. இங்குச் சுட்டப்படுகின்ற மாசு இலக்கியப் புரிதிறன் பொருண்மையில் இயல்கின்றது.  அதாவது வெளிப்படையாகப் படைப்பாளர் கூறிய செய்திகளோடு, சொல்ல விரும்பியவற்றை அறியவேண்டும்; இலக்கண, பொருண்மையியல் பொருத்தத்துடன் விளம்பு பொருளை முறையாக உணரலாம். ஆனால் தவறான, பொருத்தமற்ற புரிதிறன் வாய்க்கலாகாது. இங்கு மாசு என்பது தவறான, பொருத்தமற்ற புரிதிறனைக் குறிக்கின்றது. எனவே எந்தவொரு படைப்பையும் தெளிவாக/ முறையாகப் புரிந்துகொள்ளல் இவண் வலியுறுத்தப்படுகின்றது.

பயன்பட்டது

தமிழண்ணல்(உரை.), 2008, தொல்காப்பியம், மதுரை; மீனாட்சி புத்தக நிலையம்.

*****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு