திருக்குறளின் சுருக்கத்தைப் போற்றும் பாரதியார்
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
பெரும்பாவலர்
சுப்பிரமணிய பாரதியார் உலகளவிய உயர் நோக்குடன் பன்முகப் பங்களிப்புத் தந்தவர். அவர்
18.10.1916 அன்றைய சுதேசமித்திரனில் வெளியிட்ட ’ஜப்பானியக் கவிதை’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் ,
’மாடர்ன் ரிவ்யூ’ என்னும் கல்கத்தா இதழில் வெளியான
ஜப்பானியக் கவிஞர் நோகுச்சியின்
கட்டுரையை மேற்கோள் காட்டி, ஜப்பானியப்
பாக்கள் சுருக்கமானவை, கருத்தை நேரடியாக, விளக்குபவை, அணியழகுக்கு அதிக இடந்தராதவை, வாழ்க்கையை வளப்படுத்துபவை என்று நோகுச்சி குறிப்பிட்டிருப்பதாக எடுத்துரைத்துள்ளார்.
அதோடு கீழ்வரும் சில பதினேழசை ஹொக்குப் பாக்களையும் சான்றாகத்
தந்துள்ளார்:
Ø பருவமழையின் புழையொலி கேட்பீர்!
இங்கென் கிழச் செவிகளே!
ü தீப்பட்டெரிந்தது!
வீழுமலரின் – அழகென்னே?
இவ்வாறு
சுருங்கச் சொல்லி விளங்கவைக்கின்ற ஜப்பானியப் பாவமைப்பைப் போற்றி, கட்டுரையின் நிறைவாக,
நமக்குள்ளே திருக்குறள் இருக்கின்றது.
”கடுகைத் துளைத்து ஏழ்
கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்”
என்று
இடைக்காடரின் திருவள்ளுவமாலைப் பாவைச் சுட்டி,
நோகுச்சி சொல்வதில் உண்மை
இருக்கிறது
என்று
ஒப்பி,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்னும் 423ஆம் குறட்பாவைக் குறிப்பிட்டுக் கட்டுரையை நிறைவுறுத்து கின்றார்.
இதனால் ஒப்பீட்டு நோக்கில் திருக்குறளின் சுருக்கமும் தெளிவும் பாரதியைக்
கவர்ந்ததைத் தெளியலாம்.
பயன்பட்டது
பெரியசாமித் தூரன், பாரதி தமிழ். பக்கங்கள் 219-223. www.tamilvu.org/library/nationalized/pdf/61-pe.thuran/272-bhaarathiththamizh.pdf
Comments
Post a Comment