‘ ஒற்றுமையே உயர்வு ‘ - வள்ளுவம்
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
மானுட மேன்மைக்காக ஆக்கப்பட்டுள்ள வள்ளுவம் தனிமனித, சமூக, அரசியல், பொருளியல்,
பொது வாழ்வியல், இல்லறம் ஆகியவற்றின் சீர்மைக்கான
கொள்கை வரைவுகளை விண்டுரைத்துள்ளது. இவை இட, காலப் பொதுவானவை. அவற்றுள் ஒருவரோடும் பகை கொள்ளாத இகல் தவிர்த்தல் என்னும்
உளச் செம்மையால் உருவாகின்ற பயனை, ஒற்றுமையின் உயர்வை இக் குறிப்புரை எடுத்துரைக்கின்றது.
இகல் வேண்டாம்:
மனிதர்களுக்குள் பல காரணங்களால் கருத்து
மாறுபாடு தோன்றுவதுண்டு. அப்போது அறிவியல்
மனப்பான்மையுடன் அணுகினால் பகைமை தவிர்க்கப்படும். அதோடு அன்பும் கருத்து மாறுபாட்டை
மதிக்கின்ற வெளிப்படையான மனநிலையும் தேவைப்படுகின்றது. இதனை வள்ளுவம் நூல் முழுக்கவும்
வலியுறுத்துகின்றது. குறிப்பாக, 858ஆம் குறட்பாவில்,
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு
கருத்து வேறுபாடு
தோன்றுகின்றபோது அதனை வளர்க்காமல், முறையாக அணுகிக் கருத்தொற்றுமையை உருவாக்க
முயலவேண்டும்; பகைமையை வளர்த்தால் கேடு நேரும். இக் குறட்பாவின் விளக்கமாக, இராமனுக்கு வசிட்டர் உரைத்த
யாரொடும்
பகை கொளன் என்றபின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ (கம்பர் -1419)
என்னும் கம்பராமாயணப் பாடல் இயல்வது இங்கு ஒப்பத்தக்கது. எந்த நிலையில்
உள்ளவர்களும் பகைமை தவிர்த்து, ஒற்றுமையாக வாழ்ந்தால் உயர்வு வாய்ப்பாகும்; அமைதி நிலவி
மானுடம் வெல்லும். இகல் உளவியலில் hostility எனப்படுகின்றது. இது
குறித்த சிறு விளக்கம் வருமாறு:
In psychology, hostility is a personality trait that
involves a negative attitude towards others, and is characterized by a number
of cognitive, affective, and behavioral components:
·
Cognitive: A
cynical mistrust of others, and negative beliefs about the world
·
Affective: The
expression of anger and contempt, which can range from moderate to high
· Behavioral: Actions and mannerisms that can perpetuate interpersonal conflicts, such as irritability and aggression
எனவே அமைதி நிலவ, ஆக்கம் பெருக அனைவரிடமும்
அன்புடனும் அக்கறையோடும் நட்பாடலாம்; ஒற்றுமையே உயர்வு.
நன்றி : இணையத் தரவுகள் ********
Comments
Post a Comment