திருக்குறளில் ‘பிற’ – பொருட்பன்மை
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
மக்கள் வையத்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகின்ற
திருக்குறளின் சொல்லாட்சியையும் சொற்பொருண்மையையும் தெளிந்தால் நற்பயன் வாய்க்கும்.
அவ் வகையில் பிற என்னும் பழந்தமிழ்ச் சொல் பெயர், வினை ,அடை ஆகிய வடிவங்களில்
வள்ளுவத்தில் பயிலுமாற்றை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது.
பிற
: மற்ற என்னும் பொருளுடைய பெயராக மற்றவர், மற்றவை என்றும்; தோன்றுதல் என்னும்
பொருளில் பிறந்தார் என்று வினையாகவும்; மற்ற பொருட்கள் என்று பெயரடையாகவும்
இச் சொல் தொன்றுதொட்டுப் பயில்கின்றது.
வள்ளுவத்தில்:
பழந்தமிழ் மரபைப் பேணுகின்ற திருக்குறளில்,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்;
ஆகுல நீர
பிற (34)
என்று மற்றவை என்னும் கருத்தில் பலவின்பாற் பெயராக இயல்கின்றது. அடுத்து,
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும் (1044)
என்னும் குறட்பாவில் தோன்றுதல்
என்று வினையாகவும்,
அறவினை யாதெனின் கொல்லாமை ;கோறல்
பிறவினை எல்லாந் தரும் (321)
என்று மற்ற என்னும் பெயரடையாகவும் இச் சொல் ஆளப்பட்டுள்ளது.
இவ்வாறு இச் சொல் பெயர், வினை ,அடை ஆகிய வடிவங்களில் வள்ளுவத்தில் இயல்கின்றது.
இத்தகைய பொருண்மைத் தெளிவு, சீரிய இலக்கியப்
புரிதலுக்கும் பாப் புனைகின்ற படைப்பாளனுக்கும் துணையாகும். விளம்பு பொருளாலும் சொல்லாட்சிச்
சீர்மையாலும் வள்ளுவம் அறிவுக்கு விருந்தாகின்றது.
நன்றி: இணையத் தரவுகள் ************
Comments
Post a Comment