சிவ வேடத்தில் வந்த பகைவனையும் போற்றிய மெய்ப்பொருளார்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
நாயன்மாராகிய சைவப் பெரியோரின் பக்திப்
பெருமை மிக்க அருள் வாழ்க்கையைக் கதைக்கின்ற பெரியபுராணம்,
சேதி நன்னாட்டு நீடு திருக்
கோவலூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழி
வரு மலாடர் கோமான்
வேத நல் நெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து
அறிந்து ஏவல் செய்வார்
என்று அறிமுகப்படுத்துகின்ற மெய்ப்பொருள்நாயனார் சிவ/தவ
வேடத்திற்கு முதன்மை தந்து போற்றிவந்தார். இவரது சிவவேடப்பற்றை அறிந்துகொண்ட பகைவன்
முத்தநாதன் வஞ்சகமாகச் சிவவேடத்தில் அரண்மனையில் புகுந்து புத்தகக் கட்டில் மறைத்துவைத்திருந்த
வாளால் மெய்ப்பொருளாரைக் கொன்றான். உயிர் பிரிகின்ற வேளையில் தனது பணியாளான தத்தனிடம்
‘ இவர் நமக்கு வேண்டியவர்’ என்றுரைத்து, ’இவரைத் துன்புறுத்தாது அனுப்புக’ என்று மெய்ப்பொருளார்
பணித்தார். பக்தித் தளத்தில் பகைவர் இல்லை; சிவ வேடதாரிகள் இறைவனுக்கு நிகரானோர் என்னும்
கொள்கை போற்றற்குரியது. இத்தகைய பேருள்ளம் தீவிரப் பக்தியால் வாய்க்கின்றது.
நன்றி: இணையத்
தரவுகள்
********
Comments
Post a Comment