பள்ளமடையும் மேட்டுமடையும்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தமிழ்
இலக்கியப் பெரும்பரப்பில் காலந்தோறும் பல்வகை இலக்கிய வகை தோன்றிவருகின்றன. இவை
ஒவ்வொன்றின் இலக்கியக் கொள்கைகளும் வெவ்வேறானவை; தனித்தன்மை வாய்ந்தவை. இதை
உணர்ந்து அணுகினால் இலக்கியப் புரிதிறன் வாய்க்கும். அவ் வகையில் ஆண்டாளின் பள்ளமடைப் பாசுரங்களான
திருப்பாவைப் பாடல்கள் மார்கழித் திங்களில் வைணவர்களால் கொண்டாடப்படுவதோடு, வைணவச்
சடங்குகள் அனைத்திலும் சாற்றிச் சேவிக்கப்படுகின்றன. ‘சங்கத் தமிழ்
மாலை முப்பது’ ‘ வேதத்திற்கு வித்து’ என்று போற்றப்படும் திருப்பாவை பாவை
நூல்களுள் காலத்தால் முன்னையது; சீரிய உரை விளக்கங்களைக் கண்டது. ஆண் அடியார்கள் இறைவனைத் தலைவனாகவும், தம்மைத் தலைவி ஆகவும் பாவித்துப் பாடுவது நாயகநாயகி பாவம் என்று அழைக்கப்படும். ஆனால் ஆண்டாள் இயல்பாகவே நாயகியாக நின்றாள். ’மானிடவனை மணந்து வாழமாட்டேன்’; இறைவனுக்கே
ஆட்படுவேன்’ என்று உறுதிகொண்ட ஆண்டாளுக்கு மடை திறந்த வெள்ளம் போல் காதல்/பக்தி பெருக்கெடுத்து
ஓடியது. எளிய, ஆன்மீக மதிப்புடைய பாவைப் பாடல்களை
இயற்றினார். எனவே இதைப் பள்ளமடை என்று சிறப்பித்துக் கொண்டாடுகின்றனர். அதாவது அடைத்துவைத்துத் திறக்கப்பட்ட நீர் பள்ளத்தை நோக்கிச்
சீறிப் பாய்வது போல் வெளியான உணர்ச்சி வெள்ளமாக இவை அமைந்துள்ளன. பாவனையாக
இயலவில்லை. ஆனால் ஆண் ஆழ்வார் பாடல்கள் நீர் மேனோக்கிச் செல்வது போல் நாயகநாயகி பாவனையாக/ மேட்டுமடையாக இயல்கின்றன. இந்த வேறுபாட்டை உணர்ந்து படித்தால் ஆண்டாளின்
பக்திப் பாசுர மேன்மை விளங்கும்.
நன்றி: இணையத் தரவுகள் @@@@@@@@@
Comments
Post a Comment