உறின் × அறின் – உறவுசார் முரண்மை ( Be careful with selfish friends )
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
மனித
வாழ்க்கையில் உறவும் நட்பும் இன்றியமையாதவை. இவை நல்லோருக்குள் நேரின் இரண்டு முனையினருக்கும்
நன்று. ஆயின் பயன்நோக்கிப் பழகுவோரால் பயன் நேராது; நட்பும் நீடிக்காது என்பதை உறின்
× அறின் என்னும் முரண்மையால் வள்ளுவம் எச்சரிக்கின்றது. தீ நட்பு அதிகாரத்திலுள்ள,
உறின்நட்டு அறின் ஒருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும்
இழப்பினும் என் (812)
என்னும் குறட்பாவில்
உறின்= பயன் ஏற்பட்டால்
அறின்
= பயன் விழையாவிடின்
என்னும் முரணான
மனநிலைகள் / தன்னல எதிர்பார்ப்புச் சுட்டப்பட்டு, தகைமை அறிந்து தக்காரோடு நட்பாடுக என்று அறிவுறுத்தப்படுகின்றது. முரண்மையால் உணர்த்தப்படுகின்ற
இத்தகைய உறவியல் விழுமியங்கள் மேன்மையான வாழ்விற்கு
வித்தாவன. கீழ்வரும் இணையத் தரவு ஒப்பத்தக்கது:
How
to deal with overly selfish and entitled people :
1. Avoid them, if and
when possible. Engaging with selfish people usually leads to negative results.
...
2. Set clear boundaries.
Call them out when their behavior becomes too much. ...
3. Educate them on the
risks they face. Selfishness has many negative impacts you can bring up.
நன்றி: இணையத் தரவுகள் **********
Comments
Post a Comment