வள்ளுவத்தில் ‘உறை’ – பொருட்பன்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                இலக்கியம் மனித வாழ்க்கையிலிருந்து தோன்றி, மானுட வெற்றியை வாய்ப்பாக்க விழைகின்றது. அதற்கு இலக்கியத்தின் பாடுபொருளை / விழுமியத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு சொல்லையும் / கருத்தையும் தெளியவேண்டும். திருக்குறளின் சொல்லாட்சி நுட்பமானது. அதனால் வள்ளுவச் சொற்களைச் சூழல் நோக்கிக் கருத்துணரலாம். இந் நிலையில் உறைஎன்னும் பழந்தமிழ்ச் சொல் வள்ளுவத்தில் பெயராகவும் வினையாகவும் பொருட்பன்மையில் பதினோரிடங்களில் இயல்வதைச் சுட்டுவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. இதைக் கீழ்வருகின்ற அட்டவணையால் தெளியலாம்:

குறள் எண்

கருத்து

50, 499

தங்குமிடம்

84

வாழ்தல்

208, 890, 1015, 1130

தங்குதல்

426

நடத்தை

559

மழை

564

வாழ்நாள்

680

ஆளுமிடம்


 

இவற்றுள் 84, 1130 ஆகிய குறட்பாக்களில் வினையாகவும் மற்றவற்றில் பெயராகவும் ’உறை’ இயல்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு சொல்லையும் நோக்கின் புரிதிறன் சிறக்கும்.

                                                                         *******

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு