அமரர் – வள்ளுவச் சொற்பொருள்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
உயர்தனிச் செம்மொழியான தமிழ்
மாற்றம் / வளர்ச்சி ஆகியவற்றிற்கேற்பத்
தன்னைத் தகவமைத்துக்கொண்டு மக்களின் வழங்கு மொழியாக விளங்கிச் செழிக்கின்றது.
இந் நிலையில் சொற்பொருள் வரலாற்றில் உயர்பொருட்பேறு, இழிபொருட்பேறு, விரிவாக்கம் போல்வன இயல்கின்றன. அமரர் என்னும் தொன்மச்
சொல் இத்தகையது. பழந்தமிழ்ச் சொல்லான இது இறந்தோர் / வானோர் என்னும் கருத்தில் ’அமரர் ஊர்தி’ என்னுமாறு இன்றும் வழங்கப்படுகின்றது.
அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆக……… ( நாலடியார் பாடல் 373 ; 01-02 )
என்னும் பதிவில்,
தொன்ம அடிப்படையில் வானோர் என்னும் பொருளில் இச் சொல் பயில்கின்றது.
வள்ளுவத்தில் அடக்கமுடைமை அதிகாரத்திலுள்ள,
அடக்கம் அமரருள் உய்க்கும் ; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (121)
என்னும் குறட்பாவில் சமூக உளவியல் செயல்பாடான புலன்/ நா அடக்கத்தை வலியுறுத்தும்போது, அடக்கத்தின் பயனைச் சுட்டுகின்ற திருவள்ளுவர் இருமைத் தன்மையை [அடக்கம்; அடங்காமை] உறழ்ந்து நன்மையையும் கேட்டையும் எடுத் துரைத்து, அடக்கத்தை வலியுறுத்துகின்றார். இது அற இலக்கிய விளம்பு முறையாகும். இந்தப் பொருட்களன் சூழலில் அமரர் என்னும் சிறப்புச்
சொல்லுக்கு ஆள்வினை மிக்க
ஆன்றோர் என்று கருத்துரைக்கலாம்.
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து
கிளவாச் செறிவு (715)
ஆகிய கருத்தொத்த
குறட்பாக்களை இவண் ஒப்பலாம். தொல்காப்பியப் புறத்திணை யியல் 26ஆம் நூற்பாவில் அமரர்
என்னும் சொல் ஆள்வினை மிக்க
ஆன்றோர் என்னும் கருத்தில் பயில்வதை நோக்கலாம். இங்ஙனம் பொருட்களன், சூழல் ஆகியவற்றை
நோக்கிக் கருத்துணர்ந்தால் இலக்கிய நுகர்வும் கருத்துப் பேறும் சிறக்கும்.
நன்றி : இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment