வழி நாள் = அடுத்த நாள்- சூழல் தொடர்ப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            பழந்தமிழ்ச் சொல்லான வழி பாதை என்னும் கருத்தில் மக்கள் வழக்கிலும் இலக்கியப் படைப்பிலும் இயல்கின்றது. இச் சொல் தொடரில் அமையும்போது அண்மையுறுப்பின் பொருள் தாக்கத்தால் சூழலுக்கேற்ப விரிவான பொருள் பயக்கின்றது. ஒரு தீர்மானத்தை ஒருவர் கூட்டத்தில் முன்மொழிய, அடுத்தவர்  வழிமொழிகின்றார்; இவண் அடுத்து என்னும் கருத்தில் வழி இயல்கின்றது.  கால்வழி என்னும் தொடரில் அடுத்த தலைமுறை என்று பொருள்படுகின்றது. இத்தகைய பொருண்மை மரபில் சங்க இலக்கியங்களில் வழி நாள் என்னும் தொடர் அடுத்த நாள் / அடுத்த பருவம் என்னும் கருத்தில் இயல்வதை,

            வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்….. ( புறநானூறு பா 176 அடி 12 )

என்னும் அடியால் அறியலாம். இவ்வாறே,

               வேனில் நின்ற வெம் பத வழி_நாள் (சிறுபாணாற்றுப்படை, அடி 09 )
 
என்னும் அடியால் அடுத்த பருவம்  என்னும் கருத்தில் பயில்கின்றது, 
   
               இவ்வாறாக வழி என்னும் சொல் , தொடர்ப் பொருண்மையில் விரிவுற்று அடுத்த என்னும் கருத்தில் இயல்வதைத் தெளியலாம். இத்தகைய பொருண்மை இயக்கத்தை இலக்கியம் கற்றலிலும் கற்பித்தலிலும் கருதினால் புரிதிறன் சிறக்கும்.
 நன்றி : இணையத் தரவுகள்                                                           *******

 

            

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு