வள்ளுவத்தில் ‘ உப்பு’ – ஒப்புருப் பொருண்மை
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கியம் மொழியால் ஆன நுண்கலையும் ஆராய்ச்சிப் பொருளும் ஆகும்.
பல்துறை ஆய்வுக்கு நிலைக்களனாக விளங்குகின்ற இலக்கியப் பனுவல்களின் மொழி/ நடைக் கூறுகள்
கூர்ந்துநோக்கித் தெளியத்தக்கன. அவ் வகையில் வள்ளுவத்தில் உப்பு என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல் ஒப்புருச் சொல்லாக
இயல்வதை இக் குறிப்புரை விளக்குகின்றது. திருக்குறளில்
802, 1050, 1302, 1283 ஆகிய நான்கு குறட்பாக்களில்,
1050, 1302 ஆகியவற்றில் இன்சுவை
802, 1050 ஆகியவற்றில் நுகர்பொருள்
என்னும் தொடர்புடைய கருத்தில் இச் சொல் பயில்கின்றது. இங்ஙனம்
ஒவ்வொரு சொல்லையும் உற்றறிந்து சூழல் நோக்கிப் பொருள் தெளிந்தால் இலக்கிய விழுமியத்தை
உணரலாம்.
*******
Comments
Post a Comment