‘வாரி ’- வளமைப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            தமிழிலுள்ள சொற்கள் பொருள் உணர்த்துவதோடு, பண்பாடு, பொருளாதாரம், உளவியல் போன்ற துறைச் செய்திகளையும்  உள்ளடக்கியுள்ளன. அவற்றுள் ’வாரி’ என்னும் பழந்தமிழ் வளமைச் சொல் வள்ளுவத்தில் பயிலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது. இச் சொல் பெயராக வளம் என்னும் பொருளிலும் அள்ளுதல் [ குப்பையை வாரிக்கொட்டு ] என்னும் பொருளில் வினையெச்சமாகவும் இன்று வரை வழங்கப்படுகின்றது. கொங்கு வட்டாரத்தில் கிணற்றில் மாடு கட்டி நீர் இறைக்கின்ற பகுதியை  வாரி என்று சுட்டுவர். வள்ளுவத்தில்,

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்  ( 14 )

என்னும் குறட்பாவில், மழை வளம் என்னும் பொருளிலும்,

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை (512)

என்னும் குறட்பாவில், பொருள் வருவாய் மூலங்கள் என்னும் கருத்திலும் இச் சொல் ஆளப்பட்டுள்ளது. இங்ஙனம் வள்ளுவரின் நடைச் சீர்மையை அறிவதோடு சூழலுக்கேற்பக் கருத்துணர்ந்தால் வள்ளுவ விழுமியங்களைத் தெளிந்து வளமுறலாம்.

  நன்றி : இணையத் தரவுகள்                                      ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு

தமிழியலாய்வு