இவணை – சொற்பொருள்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தமிழ் மொழியின் தொன்மை காரணமாகவும் பல்வேறு காரணங்களாலும் சொற்பொருளில் மாற்றம்
ஏற்படுவதுண்டு. சான்றாக நாற்றம், கழகம்
ஆகியவற்றைக் கருதலாம். அங்ஙனமே சொல் மறைவதும் தோன்றுவதும் உண்டு.
இந் நிலையில் இவணை என்னும் பழஞ்சொல் நோக்கத்தக்கது. இக் காலத்தில் கடிதம் எழுதும்போது இறுதியில் இப்படிக்கு
/ இவண் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இங்கு என்னும் பொருளில் அதிகமாக வழங்குவதில்லை. பழந்தமிழில் இங்கே என்னும் கருத்தில் இவணை ஆளப்பட்டதைக் கீழ்வருகின்ற
வழக்காறுகளால் தெளியலாம்.
இன்று நீ இவணை
ஆகி எம்மொடு ( நற்றிணை பா 215; 08)
சேயை ஆயினும் இவணை
ஆயினும்
( புறநானூறு பா 381;19 )
மேற்கண்ட அடிகளில் இங்கே என்னும் கருத்தில்,
சேய்மை என்பதற்கு எதிர்ச்சொல்லாக இவணை ஆளப்பட்டுள்ளது.
இதன் ஒப்பொலிச் சொல்லான இவனை , இவன்+ ஐ என்று அமைகின்றது. இத்தகைய பழஞ்சொற்களை முறையாக அறிந்து
பொருள்கொண்டால் தெளிவு வாய்க்கும்.
நன்றி: இணையத்
தரவுகள் ******
Comments
Post a Comment