தீய பரப்புச் சொல் சான்றோர் வாய்த் தோன்றா – கருத்தாடல் விழுமியம்
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
மனித
வாழ்க்கையில் கருத்தாடலுக்கு முதன்மையான இடமுண்டு. அதனால் அற இலக்கியங்கள் நன்மை, இனிமை,
பண்புடைமை, சுருக்கம், தெளிவு, செறிவு, சூழலறிதல் ஆகிய பண்புகளைக் கொண்டதாகச் சொல்லாடல்
இயலவேண்டியதை வலியுறுத்து கின்றன. இதில் நான்மணிக்கடிகையின் 95ஆம் பாடல் சுட்டுகின்ற
,
தீய பரப்புச் சொல் சான்றோர் வாய்த் தோன்றா
என்னும் சீர்மை அறியத்தக்கதாகும். பொய், குறளை, கரப்பு, வடு போல்வன தீமை பயக்கின்ற
சொற்கள் / சொல்லாடல். இவற்றால் தீமை பரவும் / வளரும். இது சமூகச் சீர்கேடாகும் ; அமைதி
குலையும்; தனிமனித மதிப்புக் கெடும்; நல்லிணக்கம் வாய்க்காது. இங்ஙனம் பல தீமைகளுக்கு
வித்திடுகின்ற கொல்லும் சொல்லைத் தவிர்த்து, வெல்லும் சொற்களை ஆளலாம். அப்போது மானுடம்
வெல்லும்; பண்பாடு சிறக்கும். நாநலம் நன்மையை மிகுக்கும்.
நன்றி:
இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment