ஆரா
× பேரா- எதிர்ப்பொருள் வழி வள்ளுவம் வகுக்கும் விழுமியம்
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
ஒரு மனிதனின் எண்ணங்களும்
செயல்களும் அவனுக்கு இன்ப, துன்பத்தை உண்டாக்குகின்றன என்னும் இயல்நெறிக் கோட்பாட்டை
வள்ளுவம் நூல் நெடுகிலும் எடுத்துரைக்கின்றது. அந் நிலையில் அவா அறுத்தல் அதிகாரத்திலுள்ள,
ஆரா இயற்கை அவாநீப்பின் அந் நிலையே
பேரா இயற்கை தரும் ( 370 )
என்னும் குறட்பா உன்னத்தக்கது.
ஆரா, பேரா என்னும் எதிர்ப்பொருட் சொற்களின்
மூலம் தகுதியற்ற / நலம்பயக்காத ஆசையை நீக்குக / வேரோடு கிள்ளியெறிக என்னும் அறவுரை
அறையப்படுகின்றது. பேராசையின் இயல்பு மனநிறைவைத் தராமை, மென்மேலும் அலைத்தல் போல்வன
என்பதை ஆரா இயற்கை என்னும் தொடர் குறிக்கின்றது. அடுத்து அவா நீப்பின் நிலையான / நீடித்த
இன்பம் தங்கும் என்பதை, பேரா இன்பம் என்னும் தொடர் சுட்டுகின்றது. இதை வீடு / முக்தி
என்றும் கருதலாம். இங்ஙனம் எதிர்மை வழியாக வள்ளுவம் வகுக்கும் விழுமியத்தைத் தெளிந்து,
உயர்வுள்ளி, உலகம் தழுவி விழிப்புணர்வோடு வாழ்வாங்கு வாழ அனைவருக்கும் வாய்ப்பிருப்பதைத்
தெளியலாம்.
நன்றி: இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment