ஒப்புரவாளனே
உயிர் வாழ்வான் – சமூக நல்லிணக்கப் பொருண்மை
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
அற இலக்கியங்கள் மானுட
மேன்மைக்கான கொள்கை வரைவுகளை விண்டு ரைக்கின்றன. அவற்றுள் சமூக நல்லிணக்கமும் ஒன்றாகும்.
கூடி வாழ விரும்புகின்ற விலங்காகிய மனிதன் இனிமையாக / வளமாக வாழப் பிற மனிதர்/ உயிரினங்களின்
உறுதுணை இன்றியமையாதது. அதனால் ஒருவருக்கொருவர் உதவியும் உணர்வுகளை மதித்தும் இணங்கி
வாழவேண்டும். ஊருக்குள் இருக்கின்ற நன்னீர்க் கிணறாகவும் மருத்துவப் பயனுடைய மரமாகவும்
ஒவ்வொருவரும் பயன்படவேண்டும். இன்சொல், இணக்கம், உதவி, அறங்களை/ உணர்வுகளை மதித்து
நடத்தல் ஆகிய பண்புகளைச் செயல்படுத்துபவர் ஒப்புரவாளர் [empathetic person] எனப்படுகின்றார்.
வள்ளுவம் இத்தகைய பண்பாளராக ஒவ்வொருவரும் இயல்பாக உலக நன்மை வாய்க்க இயங்கவேண்டும்
என்று ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வலியுறுத்துகின்றது. இதை’’ஒப்புரவு ஒழுகு’ என்று அவ்வையின்
ஆத்திசூடியும் வழிமொழிகின்றது. வள்ளலார் உயிரிரக்கத்தை வலியுறுத்தியதை இவண் கருதலாம்.
நன்றி: இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment