நாய் – புறநானூற்று ஒப்புருப் பொருண்மை

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                சங்க இலக்கியங்கள் தொல்தமிழரின் வாழ்வியலை வெளிப்படுத்துகின்றன. மக்கள் விலங்குகளை வளர்த்ததையும் அவற்றைப் பல செயல்பாடுகளில் ஈடுபடுத்தியதையும் உணவாக உண்டதையும்  எடுத்துரைக்கின்றன. வேட்டைக்குப் பயன்பட்ட நாயை,

                கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் ( பா33/01 )

போன்ற புறநானூற்று அடிகளால் அறியலாம். இதோடு, சூதாடு கருவியைக் குறிப்பதை,

                நரைமூதாளர் நாயிடக் குழிந்த ( பா. 52/ 14)

என்னும் புறநானூற்று அடியால் தெளியலாம்.  முதியோர் நாய் என்னும் சூதாடுங் கருவியை உருட்டி விளையாடிய நிகழ்வை இவ் அடி சுட்டுகின்றது.

                இதனால் புறநானூற்றில்  நாய் என்னும் ஒன்றன்பாற் பெயர்ச்சொல் இரு வேறு பொருள் சுட்டி, ஒப்புருச் சொல்லாகப் பயில்வது தெளிவு.

                நாட்டுப்புற விளையாட்டில் நாய், ஆடு, புலி என்னும் காய்கள் விலங்குப் பெயர்களாக அமைவது இவண் நோக்கத்தக்கது. தெய்வங்களின் வாகனமாக விலங்குகளும் பறவைகளும் அமைகின்றன என்பதோடு சிறப்பு / இழிவு உவமையாக, நன்றி / இழிவு ஆகிய உணர்வுகளைக் குறிக்க இவை ஆளப்படுகின்றன. நாட்டின் கொடியிலும் இடம்பெறுகின்றன.

                இயற்கை பேணல், பல்லுயிர்க் காப்பு, உயிரிரக்கம் ஆகிய கருத்துகளை இங்கு இணைத்து நோக்கலாம்.

நன்றி: இணையத் தரவுகள்                              ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு