புறநானூற்று அடிகளை உரையாக்கிய அழகர்

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

புறநானூற்றில் அரிய செய்திகள் மண்டிக்கிடப்பதால் அவை புலவோரின் அறிவுக்கு விருந்தாகின்றன, அவ்வாறே திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகரையும் ஈர்த்தன.  சிற்றினஞ் சேராமை என்னும் 46ஆம் அதிகார விளக்கத்தில் இவர்,

     அதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது

    ” நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லென்போர்

 

என்று அகராதி விளக்கம் போல் சுட்டியுள்ளார். ஆயினும் அழகர் இந்த மேற்கோளின் விவரத்தைக் குறிக்கவில்லை. இவ் அடிகள் புறநானூற்றின் 29ஆம் பாவின் 11,12 அடிகளாகும். அவை வருமாறு:

                     'நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

                        இல்லைஎன்போர்க்கு இனன் ஆகிலியர்!

 

          சோழன் நலங்கிள்ளிக்கு உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அறிவுறுத்திய இவ் அடிகள் காரணகாரிய இயைபுடன் பகுத்தறியும் ஆற்றலற்றோரைச் சிற்றினம் என்று   அடையாளப்படுத்தி, அத்தகையோரிடம் நட்பாடாதே என்று எச்சரித்து விழிப்புணர்வு ஊட்டுகின்றன. இவற்றைப் பரிமேலழகர் சுட்டி வள்ளுவ விழுமியத்தை விளக்குகின்றார். இதனால் இவரது பரந்துபட்ட நூலறிவு வெளிப்படுகின்றது. மானுட வெற்றிக்கான இக் கருத்து அனைவரும் பின்பற்றத்தக்கது;  என்றைக்கும் பொருந்துவதுமாகும்.

  நன்றி: இணையத் தரவுகள்                                                     *****

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு