Posts

                                                              வள்ளுவ ‘ அமை ’ முனைவர் ப . குழந்தைசாமி , புதுச்சேரி . இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமை யார்தோள் அஞ்சு பவர் ( 906) என்னும் குறட்பாவில் எதுகை / மோனையில் அமை என்னும் சொல் மூங்கில் என்னும் பொருளில் , தலைவியின் மூங்கில் போன்ற [ அமை = மூங்கில் ; ஆர் = போன்ற ] தோள் அமைப்பைக் குறிப்பதாக , ஆளப்பட்டுள்ளதை உரைகளால் அறியலாம் . செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி   ( முதல் மடலம் ; முதற்பாகம் , ப . 288 ) அமை க்கு மூங்கில் என்றும் பொருள் சுட்டுகின்றது .   “ அமையாரும் வெற்ப “  ( பழமொழி , 232 அடி 03 ) முதலிய இலக்கியப் பதிவுகளில் மூங்கில் என்னும் பொருளில் அமை பயின்றுள்ளதை ஒப்பலாம் . இதற்கு இணையாக வேயுறு தோளி என்னும் பயில்வும் இவண் உன்னத்தக்கது .  அமை என்னும் சொல் வினைப் பொருளில் , அமைந்த ( குறள் 118 ) என்றவாறு திருக்குறளில் இயல்வதும் சுட்...
                                                   ‘ அடுத்த ’ – குறளில் முனைவர் ப . குழந்தைசாமி , புதுச்சேரி . பல்லார் பகைகொளலிற் பத்து அடுத்த தீமைத்தே நல்லார் தொடர் கைவிடல் ( 450 ) நகை வகையராகிய நட்பின் பகைவரால் பத்து அடுத்த கோடி உறும் ( 817 ) என்னும் இரண்டு குறட்பாக்களில் , பத்து அடுத்த ( மடங்கு )   என்னும் கணிதவியல் கலைச்சொல் பயில்கின்றது . தொல்பழங் காலத்தில் தமிழகத்தில் கணிதவியல் ( கூட்டல் , பெருக்க , கழித்தல் ) சிறந்திருந்ததைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்ற எண்ணுப்பெயர்ப் புணர்ச்சியால் தெளியலாம் .   மேலும் ,    வெள்ளத்   தானையொடு வேறு புலத்து இறுத்த – அகநானூறு 346 / அடி 21            ஆம்பல் ஆயிர   வெள்ள   ஊழி , ஆத வாழிய பலவே – பதிற்றுப்பத்து   63 / அடிகள் 20,21 போன்ற செவ்வியல் இலக்கிய அடிகளாலும் , ஆம்பல் , வெள்ளம் போன்ற பேரெண்கள் புழங்கப்பட்டதை அறியலாம்...
                                                   வள்ளுவர் வெறுத்த ஏழை முனைவர் ப . குழந்தைசாமி , புதுச்சேரி . ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்             பல்லார் பகைகொள்பவன் ( பகைத்திறம் தெரிதல் , 873) என்னும் குறட்பாவில் , பகை   என்னும் ஏளனத்திற்குரிய அரசனின் உளப் பணபையும் அழிவை ஏற்படுத்துகின்ற செயன்முறையையும் வள்ளுவம் கடிகின்றது . 873 ஆம் குறட்பாவில் , விளையாட்டிற்காகக் கூடப் பகை கொள்ளக்கூடாது என்று எச்சரித்த வள்ளுவர் , அது பண்பற்ற / பயனற்ற பிறழ் மனநிலை என்று அறுதியிடுகின்றார் ; பகைவனிடமும் நட்பாடுவதைப் பாராட்டி , இது சீரிய உள்ளப் பண்பு என்று பரிந்துரைக்கின்றார் . மன்னனின் உளவியலும் , செயல்பாடுகளும் ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும் ; அதனால் அறிவுநுட்பத்தோடு , சீரிய பண்புநலன்களோடு ஒரு நாட்டின் தலைவன் ஆளவேண்டும் என்பது இவண் வலியுறுத்தப்படுகின்றது . இதை அறியாமல் தன்னந்தனியனாய்ப் பல நாட்டு மன்னர்க...
                             வள்ளுவத்தில் ஏஎர் / ஏர் – பொருண்மையியல் நோக்கு                                      முனைவர் ப . கொழந்தசாமி ,   தமிழியல் துறைத் தலைவர் , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி 605 008 .               திருக்குறளில் சொற்கள் வாழ்வியல் விழுமியத்தை எடுத்துரைக்க , பொருண்மை நுட்பத்துடன் ஆளப்பட்டுள்ளன ; ஒவ்வொரு சொல்லையும் தொடர் அண்மையுறுப்புச் சூழல் , பொருட்களன் , மொழி வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தெளிந்தால் பனுவலின் பயனை முழுமையாக அடையலாம் . அவ் வகையில் வள்ளுவத்தில் ஏஎர் / ஏர் ஆகியன கருத்துநுட்பத்தோடு ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது . மக்களின் பொது வழக்கோடு , இலக்கியச் சிறப்...
  திருக்குறளில் தா – கருத்தாய்வு முனைவர் ப.கொழந்தசாமி,  அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி 605 008 .         அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது . வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைக்கும்போது நடையியல் நுட்பங்களை வள்ளுவம் செவ்வனே கையாண்டுள்ளது .. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை . குறட்பாக் கருத்துகளை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால்தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி , அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும் . அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி , இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவை என்பது இவண் கருதுகோளாகும் . குறட்பாக்களின் புரிதிறனில் உள்ள கடினத் தன்மை / மருட்சி ஆகியவற்றை நீக்க இத்தகைய பொருண்மையியல் அணுகுமுறை வாய்ப்பாகும் என்னும் நோக்கில் , திருக்குறளில் தா என்னும் சொல் சுட்டுகின்ற கருத்தை விளக்...
திருக்குறளில் ஆறு – பொருண்மை நோக்கு முனைவர் ப . கொழந்தசாமி ,   தமிழியல் துறைத் தலைவர் , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி 605 008 .               அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது . வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும் , இலக்கண / இலக்கியவியல் உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன . காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை . குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி , அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் பிறக்கும் . அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவையாகின்றது . குறட்பாக்களின் புரிதிறனில் உள்ள கடினத் தன்மை / மருட்சி ஆகியவற்றை நீக்க இத்தகைய பொருண்மையியல் அணுக...