Posts

                                        321 ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்         தனிச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் மொழித் தொழில்நுட்பங்களைக் கையாண்டு ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தொடரமைப்பு உத்தியும் ஒன்றாகும். அதனால் குறட்பாக்களின் தொடர் அமைவை உற்றுநோக்கித் தெளியவேண்டும்.  அவ் வகையில், இரண்டு தொடர்களாலான, அறவினை யாதெனின் கொல்லாமை . கோறல் பிறவினை எல்லாந் தரும் ( 321) என்னும் குறட்பாவை நோக்கலாம். இதிலுள்ள அறவினை × பிறவினை ; கொல்லாமை × கோறல் ஆகிய முரண்மையைக் கருதுக. முதல் தொடரில்  கொல்லாமையை வலியுறுத்துகின்ற வள்ளுவம் அனைத்து அறச் செயல்களின் பயன்களையும் கொல்லாமை உண்டாக்கும் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றார். அறவினை என்பதைப் பன்மையாக்கி, பயன்கள் என்பதை வருவித்துக் கருத்தறியலாம். இது உடன்பாட்டுத் தொடராகும். அடுத்த தொடர் கொலைச் செயலின் தீமையைச் சுட்டிக்காட்டுகின்றது. மற்ற தீய செயல்களால் உண்டாகி...
                                                       செய்ய – பொருட்பன்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்               இலக்கியங்களில் பயில்கின்ற சொற்கள், தமிழ்ப் பொருண்மை அமைப்பையும் அறிய வாய்ப்பாகின்றன. அவ்வாறே பொருண்மை நோக்கில் சூழலறிந்து சொல்லின் கருத்தறியவேண்டும். அவ் வகையில்  செய்ய என்னும் எச்சச்சொல் பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும்  தொன்றுதொட்டு இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது.                         செய்ய திருவடி = சிவந்த தாள்   செய்ய சிந்தை = நேர் சிந்தனை ஆகிய வாக்கியங்களில் பெயரின் பண்பைச் சுட்டுகின்ற பெயரெச்சமாக இச் சொல் இயல்கின்றது. இவண் ஒற்று மிகாது .             செய்யச் சொன்னார் என்ன...
                                Thirukkural couplet 453 encapsulates a timeless truth about human relationships and character. This couplet aligns well with the proverb "Tell me who your friends are, and I'll tell you who you are," highlighting that friendships should be formed thoughtfully, as they mirror and influence our character and path in life. This idea also finds echoes in many philosophical traditions: Confucianism: emphasizes the importance of virtuous companionship for moral development. Greek philosophy: Aristotle spoke about friendships of virtue — those based on mutual goodness — being the highest form. Biblical proverbs: warn about becoming like those you spend time with (“Bad company corrupts good character.” – 1 Corinthians 15:33).                                         Courtesy : ChatG...
                                                     உறைவி – பொருட்பன்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்             உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களஞ்சியம் விரிவானது; ஆய்வுக்கு வாய்ப்பாவது; தமிழ்ப் பொருண்மை அமைப்பை வெளிப்படுத்தவல்லது. அந் நிலையில்  உறைவி என்னும் பலபொரு ளொருசொல் அறிவுக்கு விருந்தாகின்றது. உறை என்னும் அடியாக ஆக்கப்படுகின்ற இச் சொல் உறைவிடம், உறைபவள் என்று பெயராகவும், பாலை உறைவி என்று வினையாகவும்  ஆளப்படுகின்றது.     இன்னாது உறைவி அரும் படர் களைமே ( புறநானூறு,பா.145 அடி 10 )   என்னும் அடியில் ’பெருந்துயரோடு வீட்டில் இருப்பவளின் துயர் களைக’ என்று உறைவி என்னும் பெயர்ச்சொல்  இடவாகுபெயராகத் தலைவியைச் சுட்டுவதாக இயல்கின்றது. இதனோடு உரை, உறுவி போன்ற சொற்களையும் இணைத்துப் பார்த்தால் தெளிவு வாய்க்கும். இவ்வாறான சொற்களைக் கூர்ந்து ந...
                                                                                மன வளமையோடு கூடிய பொருளுடைமை – நற்றிணை விழுமியம்                                            புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்                நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று ; தன் செய்வினைப் பயனே ! சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவ...
                                               திருக்குறளில்   ’ ஒன்று ’- பொருட்பன்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் இலக்கியங்கள் மொழியை மூலப்பொருளாகக் கொண்டு கருத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. படைப்பாளர் தன் நோக்கத்திற்கும் மொழித்திறனுக்கும் ஏற்ப மொழித்தொழில்நுட்பத்தைக் கையாளுகின்றார். அப்போது மொழியால் படைப்பும் , படைப்பால் மொழியும் செறிவுறுகின்றன. இம் முறையில் திருக்குறளிலும் மொழிப் பயன்பாடும் சொல்லாட்சியும் அறிவுக்கு விருந்தாகி ஆய்வுக்கு வாய்ப்பாகின்றன. இக் குறிப்புரையில் ஒன்று என்னும் சொல் பெயராகவும் வினையாகவும் வள்ளுவத்தில் பயில்வது விளக்கப்படுகின்றது. ஓர் இலக்கியத்தைக் கற்கும்போது அதில் பயில்கின்ற ஒவ்வொரு கூறிலும் செறிக்கப்பட்டுள்ள பொருண்மையை/ உணர்ச்சியைத் தெளியவேண்டும்.  அதற்குச் சொல்லியல், தொடரியல் பொருண்மையியல் அறிவு வாய்ப்பாகும். சான்றாக, ஒன்று என்னும் சொல் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதைக் கருதலாம். வறியார்க் கு ஒ ன்று ஈவதே ...
                                        புறநானூற்றில் எறும்பியல் / பேரிடர் மேலாண்மை / ஒழுங்கியல் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             பழந்தமிழர் இயற்கையோடு இயைந்து இன்வாழ்வு வாழ்ந்தனர் ; அதோடு இயற்கையிலிருந்து விழுமியங்களை வகுத்தனர். அம் முறையில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய புறநானூற்றின் 173ஆம் பாடல் எறும்பியலை/ பேரிடர் மேலாண்மையை / ஒழுங்கியலைச் சுட்டுகின்றது.  கீழ்வருகின்ற விக்கிபீடியா விளக்கத்தைக் கருதுக. எறும்பியல் ( Myrmecology)  என்பது , எறும்புகள் பற்றி அறிவியல் அடிப்படையி ல் ஆ யு ம் துறையாகும்.   இது பூச்சியியலில் ஒரு கிளைத் துறை ஆகும்.   எறும்பு கள் சிக்கலான சமூக அமைப்பைக் கொண்டுள்ளதால் , சமூக முறைமைகளின் படிமலர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்கா ன மாதிரியாக இன்றும் எறும்புகள் திகழ்கின்றன.   எறும்பியலின் மு தன்மைக் கூறு கள்: ·       ...